ஆயுர்வேத சிகிச்சைக்காக அத்வானி குடும்பத்துடன் தேக்கடி வருகை

ஆயுர்வேத சிகிச்சைக்காக பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானி தனது குடும்பத்துடன் தேக்கடி வந்துள்ளார்.
எல்.கே.அத்வானி
எல்.கே.அத்வானி
Published on

கூடலூர்:

முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அத்வானி கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்கியுள்ளார்.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் தேக்கடி வந்தார். இங்குள்ள ஸ்பைஸ் வில்லேஜ் என்னும் தனியாருக்கு சொந்தமான நட்சத்திர விடுதியில் அவர் தங்கியுள்ளார். அவரது பாதுகாப்புக்காக கேரள மாநில போலீசார் 70 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்வானியின் வருகை குறித்து கேரள போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில், ஓய்வு மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்காக அத்வானி தேக்கடி வந்துள்ளார். இங்கு அவர் 15 நாட்கள் தங்கி சிகிச்சை மேற்கொள்வார். உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை கட்சியினரோ, பார்வையாளர்களோ சந்திக்க அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com