குஜராத் தேர்தலில் பாஸ்வான் கட்சி போட்டியில்லை : பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கிறது

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி எந்த தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என்றும், பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
குஜராத் தேர்தலில் பாஸ்வான் கட்சி போட்டியில்லை : பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கிறது
Published on

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை காங்கிரஸ் கட்சியின் விறுவிறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க.வும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக தலித் வாக்காளர்களின் ஆதரவைப் பெற லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானை பிரச்சாரக் களத்தில் இறக்க உள்ளது. விரைவில் அவர் செய்தியாளர்களை சந்தித்து இதுபற்றி பேச உள்ளார்.

இந்நிலையில், லோக் ஜனசக்தி கட்சி இந்த தேர்தலில் எந்த வேட்பாளரையும் நிறுத்தப்போவதில்லை என்றும், கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளது. இத்தகவலை கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சிரக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com