ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகிய டாரென் லீமான் அளித்த ஒரு பேட்டியில், ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடை விதிப்பு தண்டனைக்கு ஆளான ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான் கிராப்ட் ஆகியோருடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன்.