நளினிக்கு வீடு இல்லாததால் பரோல் வழங்க மறுப்பு - வேலூரில் வக்கீல் தகவல்

முருகன் 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு மனு கொடுத்துள்ளார் என்றும், நளினிக்கு சொந்த வீடு இல்லாததால் பரோல் வழங்க மறுப்பதாக அவரது வக்கீல் கூறினார்.
நளினிக்கு வீடு இல்லாததால் பரோல் வழங்க மறுப்பு - வேலூரில் வக்கீல் தகவல்
Published on

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் நளினியை அவரது வக்கீல் புகழேந்தி இன்று சந்தித்து பேசினார்.

பிறகு, அவர் ஜெயில் வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறைத்துறை நிர்வாகம் நளினிக்கு சொந்த வீடு இல்லாததை காரணம் காட்டி பரோல் வழங்க மறுக்கிறது.

நளினிக்கு பரோல் கிடைக்கும் பட்சத்தில் லண்டனில் உள்ள அவரது மகள் ஹரித்ரா இந்தியாவிற்கு வந்து தனது தாயை சந்திப்பார்.

இதற்கான ‘விசா’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முருகனும் 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று சிறைத்துறைக்கு மனு கொடுத்துள்ளார். பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com