லாஸ்பேட்டையில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயம்

லாஸ்பேட்டையில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாஸ்பேட்டையில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயம்
Published on

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பகவான்சர்மா (வயது24). வியாபாரி. இவருக்கும் சென்னை முகப்பேரியை சேர்ந்த விசித்ரா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமானது முதல் பகவான் சர்மா தனது மனைவியுடன் மாமியார் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று பகவான்சர்மா தனது மனைவி விசித்திராவை கிருஷ்ணாநகரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். மதியம் 3 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற விசித்திரா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் விசாரித்த போது அங்கு விசித்திரா வரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் விசித்திரா இல்லை.

இதையடுத்து பகவான்சர்மா தனது மனைவி மாயமானது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com