3 இடங்களில் மண்சரிவு - ஊட்டி மலை ரெயில் நடுவழியில் நிறுத்தம்

கல்லாறு-அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டதையடுத்து கல்லாறு அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறையை அகற்றினர்.
3 இடங்களில் மண்சரிவு - ஊட்டி மலை ரெயில் நடுவழியில் நிறுத்தம்
Published on

மேட்டுப்பாளையம்:

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து பழமை வாய்ந்த யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரெயில் ஊட்டிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 7.10 மணிக்கு மலைரெயில் 150 பயணிகளுடன் புறப்பட்டது.

இதனிடையே கல்லாறு-அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே 2 இடங்களில் தண்டவாளத்தில் மண்சரிவும், அடர்லி- ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஒரு இடத்திலும் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத மற்றும் பெரிய கற்கள் தண்டவாளத்தில் விழுந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கல்லாறு அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் மின்னல் வேகத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட 3 இடங்களிலும் தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறையை அகற்றினர்.

நடுவழியில் சுமார் 2.15 நிமிடம் மலை ரெயில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர். தண்டவாளம் முழுவதும் சீரமைக்கப்பட்டு 9.45 மணிக்கு ரெயில் புறப்பட்டுச்சென்றது. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com