மேல்சபை எம்.பி. பதவியை காப்பாற்ற லல்லுபிரசாத் கூட்டத்தை சரத்யாதவ் புறக்கணிக்க முடிவு

மேல்சபை எம்.பி. பதவியை காப்பாற்றி கொள்வதற்ககாக லல்லு பிரசாத் யாதவின் கூட்டத்தை சரத்யாதவ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.
மேல்சபை எம்.பி. பதவியை காப்பாற்ற லல்லுபிரசாத் கூட்டத்தை சரத்யாதவ் புறக்கணிக்க முடிவு
Published on

புதுடெல்லி:

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைத்ததை மூத்த தலைவர் சரத்யாதவ் கடுமையாக எதிர்த்தார்.

இதை தொடர்ந்து டெல்லி மேல்சபை ஐக்கிய ஜனதா தளம் தலைவர் பதவியில் இருந்து அவரை நிதிஷ்குமார் நீக்கினார். அதோடு கட்சியின் பொதுச் செயலாளர் அருண் ஸ்ரீவத்சஹ நீக்கப்பட்டார். அலி அன்வர் எம்.பி.யும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இதற்கிடையே “பன்முக கலாசாரத்தை காப்போம்” எனும் நிகழ்ச்சியை சரத் யாதவ் டெல்லியில் சமீபத்தில் நடத்தினார். இது எதிர்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

ராஷ்ட்டீரிய ஜனதா தள கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் வருகிற 27-ந் தேதி பாட்னாவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துகிறார். நிதிஷ்குமாரை கண்டிக்கும் விதமாக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில் சரத் யாதவ் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் லல்லு பிரசாத் யாதவின் கூட்டத்தை புறக்கணிக்க சரத்யாதவ் முடிவு செய்துள்ளார்.

சரத்யாதவ் ராஷ்ட்டீரிய ஜனதா தளம் கூட்டத்தில் பங்கேற்றால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை இழப்பார்.

இதனால் அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யும்படி ஐக்கிய ஜனதா தளம் கொறடா மேல் சபையில் முறையிடலாம். மேல்சபை எம்.பி. பதவியை காப்பாற்றி கொள்வதற்ககாக சரத்யாதவ் லல்லுவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று அவரது ஆதரவாளர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com