மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த ஆட்டோ தீ பிடித்து நாசம்

லாலாப்பேட்டை அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த ஆட்டோ தீ பிடித்து நாசமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைக்கோல் தீ
வைக்கோல் தீ
Published on

லாலாப்பேட்டை:

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் பரணி (வயது 25). இவர் பெட்ட வாய்த் தலையிலிருந்து வைக்கோல் சுருள்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு லாலாப்பேட்டை வந்து கொண்டிருந்தார்.

அப்போது லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு மாரியம்மன் கோவில் அருகே வந்த போது மின்கம்பி தொங்கியதால் எதிர்பாரா தவிதமாக வைக்கோல் மீது பட்டு தீ பற்றி எரிந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கரூர் தீயணைப்பு வீரர்கள் சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com