சட்டசபையை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அலங்கரிப்பார்கள்- எல்.முருகன் நம்பிக்கை

சட்டசபையை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அலங்கரிப்பார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எல்.முருகன்
எல்.முருகன்
Published on

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடியின் 70-வது பிறந்தநாளையொட்டி, வருகிற 21-ந்தேதி வரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி சேவை வாரமாக கொண்டாடி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை ஒரு நல்ல நிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி உயர்த்தி சென்றிருக்கிறார். விவசாயிகள், மீனவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நரேந்திர மோடியின் நேர்மையான அரசியல் மீது மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த நம்பிக்கை நிச்சயம் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும். சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வினர் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று சட்டசபைக்கு நிச்சயம் செல்வார்கள். சட்டசபையை நமது எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் அலங்கரிப்பார்கள். மக்களின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு பெருவாரியாக கிடைத்து வருகிறது. மாற்று கட்சியினர் அதிகளவில் பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com