குமாரசாமி மகன் நிகில் திருமணம்: குடும்பத்தினர் முன்னிலையில் நாளை நடக்கிறது

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் திருமணம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.
குமாரசாமி மகன் நிகில் திருமணம்
குமாரசாமி மகன் நிகில் திருமணம்
Published on

பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் திருமணம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“எனது மகன் நிகில் திருணத்தை வருகிற 17-ந் தேதி(நாளை) ராமநகரில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருந்தோம். அதற்குள் கொரோனா, உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்த திருமணத்தை பிடதியில் உள்ள எனது பண்ணை வீட்டில் திட்டமிட்டபடி 17-ந் தேதி(நாளை) எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் மிக எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளோம்.

அரசின் வழிகாட்டுதல்களை மீறக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன். அதனால் எங்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் யாரும் தவறாக கருதக்கூடாது. நீங்கள் உங்களின் வீட்டில் இருந்தபடியே ஆசிர்வாதம் செய்யுங்கள். இந்த கொரோனா விவகாரம் முடிந்த பிறகு அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துகிறேன்.

கொரானா பரவலில் பெங்களூரு சிவப்பு மண்டலத்தில் இருப்பதாக அறிவித்துள்ளனர். கொரோனா பரவலில் ராமநகர் பசுமை மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது. எந்த பிரச்சினையும் ஏற்படாமல் திருமணத்தை நடத்துவோம். சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்படி தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.”

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com