வசந்தகுமார் உடலுக்கு கே.எஸ்.அழகிரி நேரில் அஞ்சலி

சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் வசந்தகுமார் உடலுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
எம்பி வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கேஎஸ் அழகிரி
எம்பி வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கேஎஸ் அழகிரி
Published on

சென்னை:

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது.

வசந்தகுமார் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு தி நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது.

சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வசந்த் & கோ நிறுவன ஊழியர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வசந்தகுமார் உடலுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com