அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: மாஃபா பாண்டியராஜன்

தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என சென்னையில் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: மாஃபா பாண்டியராஜன்
Published on

சென்னை:

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. மாஃபா பாண்டியராஜன், தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் பற்றி தினகரன் பேசியது கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது என கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபின் தனது கருத்தினை தெரிவிக்க வேண்டும். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்போம்.

ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை வேண்டும் என தினகரன் பேசியதை வரவேற்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com