கோயம்பேடு மார்கெட்டில் தொழிலாளியை வெட்டிய 2 ரவுடிகள் கைது

கோயம்பேடு மார்கெட்டில் தொழிலாளியை வெட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

போரூர்:

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். கோயம்பேடு மார்கெட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். அய்யப்பன் நேற்று இரவு பூ மார்கெட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த 2 வாலிபர்கள் அய்யப்பனிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் ஓங்கி வெட்டினர். இதில் காயமடைந்த அய்யப்பன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் .

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கோயம்பேட்டைச் சேர்ந்த மணிகண்டன், புளியந் தோப்பைச் சேர்ந்த அருணாச்சலம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. அய்யப்பனை வெட்டி விட்டு தப்பிய இருவரும் வேறு ஒருவரிடம் செல்போன் பறித்து வந்துபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com