காலி குடங்களுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் திமுகவினர் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காலி குடங்களுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை போக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் கோவையில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனினும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com