கொருக்குப்பேட்டை அருகே அரிவாளுடன் 3 பேர் கைது

கொருக்குப்பேட்டை அருகே அரிவாளுடன் வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டை அருகே  அரிவாளுடன் 3 பேர் கைது
Published on

ராயபுரம்:

கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகர் பகுதியில் ஆர்.கே.நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பரத், விக்னேஷ், பாலாஜி என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. பொன்னேரியில் உள்ள மது பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை தீர்த்துக் கட்ட அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com