கொல்லிமலை அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

கொல்லிமலை அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சேந்தமங்கலம்:

கொல்லிமலை அருகே பைல்நாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வாழவந்திநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளிசோலை கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் வைக்கோல்போரில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வீட்டு உரிமையாளர், விவசாயியான அண்ணாமலை (வயது 75) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com