கோடம்பாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

கோடம்பாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடம்பாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை
Published on

போரூர்:

கோடம்பாக்கம் அழகிரிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 47). கே.கே. நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் குடிபோதையில் இருந்த ரகுபதி தனது நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறி வெளியே சென்றார்.

பின்னர் அதே பகுதி பாரதீஸ்வரர் காலனிக்கு சென்ற ரகுபதி ஒரு கட்டிடத்தின் 2-வது தளத்திற்கு சென்று தீடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே தலை சிதறி ரகுபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் வடபழனி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ரகுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரகுபதி எதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com