கொடைக்கானல் அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த தந்தை-மகன் பலி

கொடைக்கானல் அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த தந்தை-மகன் பலியானார்கள்.
கொடைக்கானல் அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த தந்தை-மகன் பலி
Published on

பெரும்பாறை:

கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி கூடம் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). கூலித் தொழிலாளி. அவரது மனைவி மீனா. இவர்கள் தற்போது பண்ணைக்காடு காமராஜர்புரத்தில் குடியிருந்து வருகின்றனர். சம்பவத்தன்று நாகராஜ் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார்.

பின்னர் போதையில் நாகராஜ் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் அவர் ரத்த வாந்தி எடுத்தார். இது குறித்து மீனா தனது கணவரின் தந்தை கோட்டைச்சாமிக்கு தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர் பண்னைக்காடு நோக்கி விரைந்தார்.

உயிருக்கு போராடிய நாகராஜ் உடனடியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். தனது மகன் இறந்ததை அறிந்த கோட்டைச்சாமி அதிர்சியடைந்தார்.அப்போது அவரது மகள் மீனா தனது மாமனாரிடம் கணவர் வாங்கி வந்த மீதமுள்ள மதுவை காண்பித்தார். இந்த மதுரை கோட்டைச்சாமியும் குடித்தார். இதில் அவரும் சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

உடனடியாக உறவினர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டைச்சாமியும் இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இது குறித்து மீனா தாண்டிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபானத்தில் வி‌ஷம் கலக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுபான பாட்டிலும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com