ஊரடங்கு வழிகாட்டுதல்களை நாங்கள் நீர்த்துப்போகச் செய்யவில்லை- கேரள அமைச்சர் விளக்கம்

மத்திய அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்யவில்லை என கேரள அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம் தவிர பிற பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. உணவகங்கள், பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பெரும்பாலான சேவைகள் தொடங்க உள்ளன. சிறு குறு நடுத்தர தொழில்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை  கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.

கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை நீர்த்து போகச் செய்யும் என்றும் கூறி உள்ளது. ஆனால், இதனை கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மறுத்துள்ளார். 

‘மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி நாங்கள் ஊரடங்கை தளர்த்தி உள்ளோம். ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசு எங்களிடம் விளக்கம் கேட்டது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். நாங்கள் விளக்கம் அளித்தவுடன், அது சரி செய்யப்படும். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இதில் எந்த முரண்பாடும் இல்லை. இது ஒரு தவறான புரிதல், அதை நாங்கள் சரிசெய்வோம்’ என அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com