கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்- கேரள பஸ்கள் தென்காசியில் நிறுத்தம்

கேரளாவில் பா.ஜ.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடப்பதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. #sabarimala
கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்- கேரள பஸ்கள் தென்காசியில் நிறுத்தம்
Published on

செங்கோட்டை:

கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை தீர்ப்பை கண்டித்தும், அனைத்து வயது பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. பிரமுகர் சசிகலா என்பவரை நேற்று இரவு கேரள அரசு கைது செய்தது.

இதனை கண்டித்து கேரளாவில் பா.ஜ.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு பின்னர் எந்த வாகனமும் செல்லவில்லை.

தினமும் செங்கோட்டை வழியாக ஏராளமானவர்கள் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். இன்று வாகனங்கள் இயக்கப்படாததால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் கேரளாவில் இருந்து நெல்லை வந்த அரசு பஸ்கள் அனைத்தும் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பின்னர் வழக்கம்போல் வாகனங்கள் இயங்கும். #sabarimala

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com