காவேரிப்பாக்கத்தில் வீட்டில் தீப்பற்றி 20 ஆயிரம் பொருட்கள் எரிந்து நாசம்

காவேரிப்பாக்கத்தில் எதிர்பாரதவிதமாக வீட்டில் தீப்பற்றியதில் 20 ஆயிரம் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது.
காவேரிப்பாக்கத்தில் வீட்டில் தீப்பற்றி 20 ஆயிரம் பொருட்கள் எரிந்து நாசம்
Published on

அரக்கோணம்:

காவேரிப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கோட்டைத் தெருவில் வசிப்பவர் லோகநாதன்(40) கூலி தொழிலாளி.இவரது மனைவி பிரேமா(35) இன்று காலை 6 மணிக்கு டீ போடுவதற்காகாக பிரேமா கேஸ் அடுப்பை ரெகுலேட்டர் மூலம் பற்ற வைத்தார்.

அப்போது எதிர்பாரதவிதமாக ரெகுலேட்டர் வழியாக தீப்பற்றியதில் அருகில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், துணிகளில் தீப்பற்றியது.

இதனால் சிலிண்டர் வெடித்து விடுமோ என்று பயந்து கணவன், மனைவி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி தப்பினர்.

தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது வீட்டிலுள்ள பீரோ, பிரிட்ஜ் ஆகியவை எரிந்துகொண்டிருந்தது.

ஒரே புகை மன்டலமாக காட்சியளித்தது. அனைவரும் சேர்ந்து தண்ணீர் ஊற்றியும் கோனிப்பைகளை நனைத்து வீசியும் தீயை அணைக்க முயன்றனர்.

விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினரும் சேர்ந்து தீயை அணைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com