வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

கரூர் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதிக்கு உட்பட்ட முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 29). இவர் தள்ளுவண்டி கடையில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பசுபதிபாளையம் ரெயில்வேகேட் அருகே உள்ள சிக்கன் கடையில் கறி வாங்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு மது போதையில் வந்த பசுபதிபாளையம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சக்திவேல் (46), முத்துராஜபுரத்தை சேர்ந்த சேகர் (38), கரூர் இ.பி.காலனி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய மூவரும் சேர்ந்து மதன்குமாரிடம் கத்தியை காட்டி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மதன்குமார் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து, சக்திவேல் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com