திருச்செந்தூரில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் கருணாஸ் எம்.எல்.ஏ. சந்திப்பு

திருச்செந்தூரில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் சந்தித்து பேசினார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கருணாஸ் எம்.எல்.ஏ. சந்தித்து பேசிய காட்சி.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கருணாஸ் எம்.எல்.ஏ. சந்தித்து பேசிய காட்சி.
Published on

திருச்செந்தூர்:

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிதித்துறை இணை மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். விருந்தினர் மாளிகையில் அவரை பா.ஜ.க., மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் வரவேற்றனர். வரவேற்புக்கு பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு நாகர்கோவில் செல்வதற்காக அவர் காரில் புறப்பட்டார்.

அப்போது திருச்செந்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாஸ் எம்.எல்.ஏ. காரில் கோவிலுக்கு வந்தார். அப்போது நேருக்கு நேர் இருவரும் சந்தித்து கொண்டனர். இதனையடுத்து பொன்.ராதாகிருஷ்ணனும், கருணாஸ் எம்.எல்.ஏ.வும் காரிலிருந்து இறங்கி தனியாக சென்று சுமார் 15 நிமிடங்கள் பேசினர். அதன் பின்னர் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இந்த சந்திப்பு குறித்து கருணாஸ் எம்.எல்.ஏ., கூறியதாவது:-

திருச்செந்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். பின்னர் கோவிலுக்கு செல்வதற்காக வந்தபோது, பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்பாராத விதமாக சந்திக்க நேரிட்டது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளேன். இந்த சந்திப்பின்போது, மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் என மத்திய மந்திரியிடம் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com