கருணாநிதி காட்டிய பாசத்தை மறக்க முடியாது -ஜி.கே.மணி

திமுக தலைவர் கருணாநிதி முதிர்ந்த வயதிலும் அனுபவத்திலும் என் மீது காட்டிய பாசம், அன்பு அளவிடற்கரியது என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். #karunanidhi #dmk
கருணாநிதி காட்டிய பாசத்தை மறக்க முடியாது -ஜி.கே.மணி
Published on

சென்னை:

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையும் சொல் லொணாத் துயரமும் அடைந்தேன்.

நான் 1972-ம் ஆண்டில் கலைஞரை சந்தித்து அறிமுகமானேன். 15 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருடன் நெருக்கமாகப் பழகியவன். சட்டமன்றத்தில் பா.ம.க சார்பில் நான் முன் வைத்து வாதாடியதை ஏற்றுக்கொண்டு நிறைய சட்டங்களையும், சட்டத் திருத்தங்களையும் கொண்டு வந்தவர். அவர் காலத்தில் பா.ம.க வால் சட்டமன்றத்தின் மூலம் நிறைய சாதனைகளை செய்ய முடிந்தது.

அவரது முதிர்ந்த வயதிலும் அனுபவத்திலும் என் மீது காட்டிய பாசம், அன்பு அளவிடற்கரியது. மருத்துவர் அய்யாவை பல்வேறு நிகழ்ச்சிகளின் மேடைகளில் கலைஞர் பேசும்போது மருத்துவர் அய்யா என்று பாராட்டி பலமுறை பேசியது மனதில் என்றும் மறக்க முடியாதது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #karunanidhi #dmk

X

Maalai Malar
www.maalaimalar.com