

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கூர்க் பகுதியில் சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த விடுதியில் தமிழக போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி உரிமையாளருக்கு கர்நாடக மாநிலம் சந்திக்குப்பா போலீசார் திடீரென நோட்டீசு அனுப்பியுள்ளனர்.
அந்த நோட்டீசில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருப்பது பற்றி முன்கூட்டியே ஏன்? தகவல் தெரிவிக்கவில்லை. தமிழக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்படும் நபர் தங்கி இருக்கும் விபரம் குறித்தும் எங்களிடம் ஏன்? தகவல் தெரிவிக்கவில்லை.
தமிழக போலீசார் சொல்லிய பிறகுதான் எங்களுக்கு இந்த விபரம் தெரியும். எனவே இங்கு தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விபரங்களை எங்களுக்கு தர வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவானால் விடுதி உரிமையாளர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
சொகுசு விடுதியில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களை பற்றி விபரங்களை 3 நாட்களில் சொகுசு விடுதி உரிமையாளர் சந்திக்குப்பா போலீஸ் நிலையத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். இது குறித்து போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கமும் அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.