132 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் - டி.கே. சிவகுமார்

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 132 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மின்சார துறை மந்திரி டி.கே. சிவகுமார் கூறினார். #karnatakaassemblyelections #DKshivakumar #Congress
132 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் - டி.கே. சிவகுமார்
Published on

கர்நாடக மின்சார துறை மந்திரியும், கனகபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான டி.கே. சிவகுமார் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியின் போது கூறியதாவது:-

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் அளித்து அதிக வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

132-க்கும் கூடுதலான இடங்களை கைப்பற்றி நாங்கள் தான் ஆட்சி அமைக்கப்போகிறோம்.

தற்போது முதல் மந்திரி நாற்காலி காலியாக இல்லை. எங்கள் கட்சி சித்தராமையாவை முன்நிறுத்தி தேர்தலை சந்திக்கிறது. அவர் தான் எங்கள் தலைவர். ஆகையால் நான் முதல் மந்திரி ரேசில் இல்லை. மேலிடம் யாரை அறிவிக்கிறதோ அவர்தான் முதல் மந்திரியாக பொறுப்பேற்பார்.

முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வருவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டுள்ள கிருஷ்ணா, மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

பா.ஜனதாவும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியும், முதல் மந்திரி பதவிக்கு, தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முன்னிறுத்துவது குறித்து வாயே திறக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பரமேஷ்வர் பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓருவேளை தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் முதல் மந்திரி பதவிக்கு முன் நிறுத்தப்பட்டால் என்னுடன் சேர்த்து மல்லிகார்ஜூன கார்கே, கே.எச்.முனியப்பா ஆகிய மூவரும் ரேசில் இருப்போம்.

கட்சி மேலிடம் எங்கள் 3 பேரில் ஒருவரை முதல்-மந்திரி பதவிக்கு தேர்ந்தெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #karnatakaassemblyelections #DKshivakumar #Congress

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com