காரிமங்கலம் அருகே கார் மோதி உப்பு வியாபாரி பலி

காரிமங்கலம் அருகே கார் மோதி உப்பு வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம் அருகே கார் மோதி உப்பு வியாபாரி பலி
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பட்டகபட்டி பகுதியை சேர்ந்தவர் நூருல்லா(வயது 60). உப்பு வியாபாரி. இவர் நேற்று மதியம் பஸ்சில் மொரப்பூர் பகுதிக்கு சென்று விட்டு மாலையில் காரிமங்கலம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊருக்கு திரும்பினார்.

அப்போது காரிமங்கலம் அருகே உள்ள அகரம் பிரிவு சாலையில் வந்தபோது எதிரே வந்த கார் திடீரென அவர் மீது மோதியது. இதில் நூருல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com