

காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பேற்றவர் கராத்தே தியாகராஜன். இவர் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இது குறித்து தியாகராஜன் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து நான் பேசவில்லை. பலமுறை என்னை காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.
இப்போது எதற்காக நீக்கினார்கள் என்றே தெரியவில்லை. கட்சிக்குள் இருந்த அழுத்தமா, வெளியில் இருந்த அழுத்தமா என்பதும் தெரியவில்லை’ என கூறியுள்ளார்.