காஞ்சிபுரம் அருகே மதுபாட்டில்கள் கடத்தல்- 2 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

காஞ்சிபுரத்தை அடுத்த ஊத்துக்காடு ஜங்சனில் இருந்து வெங்கச்சேரி வழியாக, ஒரு காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் போலீசாருடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது, ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை சோதனை செய்தபோது அதில் 192 மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காவாந்தண்டலைத்தை சேர்ந்த கார் டிரைவரான குமரன் (வயது 20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான விஜயகுமார் (28) ஆகியோரை கைது செய்தனர். காரையும், மதுபாட்டில்களையும் கைப்பற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com