சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது அ.தி.மு.க.வின் உள்கட்சி பூசல் - கமல்ஹாசன்

3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது அ.தி.மு.க.வின் உள்கட்சி பூசல் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan
சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது அ.தி.மு.க.வின் உள்கட்சி பூசல் - கமல்ஹாசன்
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், நேற்று காலை ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இப்போது 4 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசாரத்துக் காக செல்கிறேன். முந்தைய பிரசாரம் போலவே இதுவும் மக்களிடம் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் நன்றாக இருப்பதாக சொல்கின்றனர். அதை நாங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் விளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, அது வாக்குகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அது போன்ற முயற்சி இந்த தேர்தலிலும் தொடரும்.

3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது, அ.தி.மு.க.வுக்குள் இருக்கும் உள்கட்சி பூசலாகத்தான் பார்க்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com