கல்லக்குடி அருகே 50 லிட்டர் சாராயம் அழிப்பு- 2 பேர் கைது

கல்லக்குடி அருகே 50 லிட்டர் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கல்லக்குடி:

கல்லக்குடி அருகே பு.சங்கேந்தி கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் உள்ள தோப்பில் 2 பெரிய பானைகளில் சாராயம் காய்ச்சியது போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், 50 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.

மேலும் இது தொடர்பாக புள்ளம்பாடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சைப்பிள்ளையின் மகன் திக்குவாய் சுரேஷ் என்ற சுரேஷ்(வயது 36), பு.சங்கேந்தியை சேர்ந்த பெரியசாமி(53) ஆகியோரை கைது செய்து லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com