கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது - கலெக்டர் அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது என்று கலெக்டர் கிரண்குராலா அறிவித்துள்ளார்.
கலெக்டர் கிரண்குராலா
கலெக்டர் கிரண்குராலா
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு இன்று(திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தடை உத்தரவு தளர்வு தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிடப்படும் வரை அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி வரை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் எவ்வித மாற்றமும் இன்றி அமலில் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com