கடையநல்லூரில் குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது

கடையநல்லூரில் குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தென்காசி:

மேலக்கடையநல்லூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி என்ற கொல்லி மாடசாமி (வயது 48), மேலக்கடையநல்லூர் வேதக்கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் இசக்கி மகன் சுரேஷ்(31). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருவரும் கைதாகி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், புளியங்குடி துணை சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் பரிந்துரைத்தனர். இதனை ஏற்று இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாடசாமி, சுரேஷ் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை, சிறை அதிகாரிகளிடம் போலீசார் சமர்ப்பித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com