கடம்பத்தூர் அருகே போலி டாக்டர் கைது

கடம்பத்தூர் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடம்பத்தூர் அருகே போலி டாக்டர் கைது
Published on

திருவள்ளூர்:

கடம்பத்தூர் அருகே உள்ள பானம்பாக்கம் மணிக்காரத் தெருவில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தவர் பைரோஸ் அகமது. இவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் தயாளன் மேற்பார்வையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது எம்.ஏ. படித்து விட்டு பைரோஸ் அகமது சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.

மேலும் அவர் கடந்த 12 ஆண்டுகளாக பானம் பாக்கத்தில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். அவரை கடம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். இதனால் அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.

கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் சிக்கினர். அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவது தொடர் கதையாக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20 பேர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் 112 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள் தோறும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com