

புதுடெல்லி:
டெல்லி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த 11ம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.
இதற்கிடையே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார். தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna