விசாரணைக்கு மேலும் கால அவகாசம் வேண்டும்: நீதிபதி ஆறுமுகசாமி அரசுக்கு கடிதம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.
Published on

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணை ஆணையம் தீபா, அரசு மருத்துவர் பாலாஜி என பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி, ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏதேனும் புகார் கூற நினைப்பவர்கள் விசாரணை ஆணையத்தில் கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய பணிகள் முடிக்கப்படாமல் உள்ள நிலையில், டிசம்பர் 25-ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்நிலையில், ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசின் பொதுத்துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com