பொங்கலுக்கு முன் பஸ் தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

பொங்கலுக்கு முன் தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். #BusStrike
பொங்கலுக்கு முன் பஸ் தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
Published on

மதுரை:

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மாநிலம் முழுவதும் தமிழக அரசின் பஸ் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை சட்ட விரோதமாக அறிவிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் இன்று காலை மனுத்தாக்கல் செய்தார். மேலும் மனுவை தாமாக முன்வந்து விசாரிக்குமாறு நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார்.

அப்போது போக்குவரத்து ஊழியர்களின் பணப்பலன் பிரச்சனை தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். அவர்களின் மறுபக்கத்தையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

எனவே பொங்கலுக்கு முன் தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com