

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்கத்திலேயே அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் 1 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 12 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 20 ரன்னிலும், ஜோ ரூட் 1 ரன்னிலும், மோர்கன் டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
இதனால் இங்கிலாந்து 114 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. ஜோஸ் பட்லர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடினார். அடில் ரஷித்தை ஒருபக்கம் வைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல், சதம் அடித்து கடைசி வரை நிலைத்து நின்று அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 122 பந்தில் 110 ரன்கள் சேர்த்தார்.
அவரது பேட்டிங்கை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலியா கேப்டன், தற்போதைய நிலையில் டோனியை விட ஜோஸ் பட்லர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘‘பட்லர் சிறந்தவர். மிகவும் சிறந்தவர். தற்போதைய நிலையில் ஒயிட் பால் போட்டியில் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.