ஜம்மு காஷ்மீரில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அம்மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 22 சமூக வலைத்தளங்கள் மற்றும் செயலிகளின் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அம்மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்முவில் கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளம் மற்றும் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தடை விதிக்கப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இன்று (26-05-2017) இரவு 8.30 மணிக்கு நீக்கப்பட்டதாக உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பிரபல செயலிகளுடன் பல்வேறு இதர இணையத்தளம் மற்றும் செயலிகளின் பயன்பாட்டிற்கு ஏப்ரல் 26-ந்தேதி அம்மாநில உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமூக வலைத்தள சேவைகளை பயன்படுத்த தடை விதிக்ககப்பட்டுள் நிலையிலும் மக்கள் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்களை பயன்படுத்தி தளங்களை இயக்கி வந்துள்ளனர். இதனால் அங்கு சமூக வலைத்தளங்களின் பன்பாடு சார்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com