மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 19 பவுன் கொள்ளை

மதுரையில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 19 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 19 பவுன் கொள்ளை
Published on

மதுரை:

திருச்சி மாவட்டம் லால்குடி அணைக்கரை சரவணா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ராதா (வயது51). இவர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

நேற்று மாலை கோரிப் பாளையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு ஷேர்ஆட்டோவில் 19 பவுன் நகையுடன் பயணம் செய்தார்.

அப்போது கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் பையில் இருந்த 19 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அண்ணாநகர் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் பிரதீப்குமார் (55). இவர் நேற்று இரவு வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பிரதீப்குமாரிடம் இருந்த 1½ பவுன் மோதிரம், ரூ.5500 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com