கோவையில் 2 பெண்களிடம் நகை பறிப்பு

கோவையில் நேற்று இரவு 2 பெண்களிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். இந்த இரு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
Published on

கோவை:

கோவை ஆனைமலையை சேர்ந்தவர் ஜான் கிருபாகரன். இவருடைய மனைவி ரூத்குணசீலி (வயது 53).

இவரது சகோதரி சிங்காநல்லூரில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக நேற்று சிங்காநல்லூர் வந்த ரூத்குணசீலி இரவு 8.30 மணி அளவில் அம்மன் கோவில் தெருவில் நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரூத்குணசீலி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் எடை கொண்ட 2 தங்கசெயின்களை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவரது மனைவி பிர்தோஸ்(44). இவர் நேற்று இரவு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் பிர்தோஸ் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com