காஷ்மீர்: பாதுகாப்பு படை ரோந்து வாகனம் மீது தாக்குதல் - முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் ரோந்து வாகனம் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
காஷ்மீர்: பாதுகாப்பு படை ரோந்து வாகனம் மீது தாக்குதல் - முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் ரோந்து வாகனம் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் லதோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ரோந்து வாகனம் மீது துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்தனர். சிறிது நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் முக்கிய தளபதி காலித் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட காலித் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் மூலமாக நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com