அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம்

தர்மபுரி மாவட்டம் அ.தி.மு.க. ஜெ. தீபா அணி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
Published on

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் அ.தி.மு.க. ஜெ. தீபாஅணி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்ட கட்சியின் மாவட்ட பொருளாளர் ஜி. மாதையன், தலைமை வகித்தார். 

மாவட்ட துணை செயலாளர் பிசி. கோவிந்தன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் எஸ். ரஞ்சிதம், இணை செயலாளர் பழனியம்மாள், முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து, அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். 

நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் கிழக்கு) பரிகம் வெங்கடாஜலம், அரூர் ஒன்றிய செயலாளர் (தெற்கு ) சிவராஜ், மற்றும் பொன்னுவேலு, என். சேகர், கண்ணபெருமாள், நஞ்ஜம்மாள், பிரகாஷ் ,யுவராஜ், மகபூப்கான் களந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com