மீனவர் அணி செயலாளர் பொறுப்பு இருந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் விடுவிப்பு: தினகரன் நடவடிக்கை

அ.தி.மு.க. மீனவர் பிரிவுச் செயலாளராக உள்ள அமைச்சர் டி.ஜெயக்குமார் விடுவிக்கப்பட்டு அந்த பதவிக்கு திருவொற்றியூர் முன்னாள் எம்.எல்.ஏ. டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மீனவர் அணி செயலாளர் பொறுப்பு இருந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் விடுவிப்பு: தினகரன் நடவடிக்கை
Published on

சென்னை:

அ.தி.மு.க. (அம்மா) அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தின கரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. மீனவர் பிரிவுச் செயலாளராக உள்ள அமைச்சர் டி.ஜெயக்குமார் விடுவிக்கப்பட்டு அந்த பதவிக்கு திருவொற்றியூர் முன்னாள் எம்.எல்.ஏ. டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரிவு செயலாளராக உள்ள பொள்ளாச்சி ஜெயராமன் விடுவிக்கப்பட்டு அந்த பதவிக்கு தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக உள்ள சிவகுற்றாலம், துணைச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.எஸ்.பாண்டியன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு அந்த பதவிக்கு மதுரை ரயில்வே பரமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இணைச் செயலாளராக புதுக்கோட்டை குணசேகரன் பொறுப்பு வகிப்பார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சி.மோகன் எம்.எல்.ஏ. மாற்றப்பட்டு அந்த பதவிக்கு தேவிகாபுரம் சி.ஏழுமலை நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com