ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்கில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரிடையே துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்கில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரிடையே துப்பாக்கிச்சூடு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள வெரினாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தத்.

இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினரை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுடத்தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com