புல்வாமாவில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்

புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான்.
புல்வாமாவில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் உள்ள பன்ஸ்காம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தை சுற்றி வளைத்து வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்.

மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கருதி ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com