

பதேர்வாக்:
காஷ்மீர் மாநிலம் செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று மதியம் 1.17 மணிக்கு திடீரென மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளியாக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கம் செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் கிஷ்ட்வார், தோடா, ராம்பன் ஆகிய மாவட்டங்களில் உணரப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் வெளியேறி வெட்டவெளியில் கூடி நின்றனர். சேதம் பற்றிய தகவல் உடனடியாக தெரியவில்லை.
இதே பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளியாக நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.