சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள 50 பேருக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை நடவடிக்கை

சுவிச்சர்லாந்து வங்கியில் கணக்கு வைத்துள்ள 50 இந்தியர்களை ஆஜராகுமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Published on

புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதற்காக குழு அமைத்தது. இந்த குழு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மூலம் சுவிஸ் கணக்கு வைத்துள்ள இந்தியர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 50-க்கும் மேற்பட்ட இந்தியர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. யாருக்கெல்லாம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. 

X

Maalai Malar
www.maalaimalar.com