ஆர்பிட்டரை பயன்படுத்தி 95 சதவீத ஆய்வு செய்வோம் - இஸ்ரோ விஞ்ஞானி அறிவிப்பு

ஆர்பிட்டர் கருவி நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. அந்த கருவி மூலம் 95 சதவீத ஆய்வு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று இஸ்ரோ நிறுவனத்தின் அதிகாரி கூறினார்.
ஆர்பிட்டர்
ஆர்பிட்டர்
Published on

பெங்களூரு:

சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

என்றாலும் ஆர்பிட்டர் கருவி நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. அந்த கருவி மூலம் 95 சதவீத ஆய்வு பணிகளை மேற்கொள்ள முடியும்.

சந்திரயான்-2 திட்டத்தின் இலக்கில் 5 சதவீதம்தான் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சந்திரயான்-2 திட்டம் தோல்வி என்று சொல்ல முடியாது. சற்று பின்னடைவு ஏற்பட்டது அவ்வளவுதான்.

ஆர்பிட்டர் உதவியால் நிலவில் நிலவும் சூழல் கண்டுபிடிக்கப்படும். எனவே சந்திரயான்-2 திட்டத்தின் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு அந்த விஞ்ஞானி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com