சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் தகவல்

சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்
Published on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிவிட்டது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதற்காக 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். அதற்காக 6 ஆய்வு மையம் உருவாக்கப்படும்.

சந்திரயான்-2 திட்டத்தில் லேண்டர் வேகமாக சென்று நிலவில் மோதியதால் வெற்றிகரமாக தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனாலும் ‘ஆர்பிட்டர்’ செயல்பட்டு வருகிறது. அது இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com